மதுரை ஆதீனம் 293வது குருமகா சன்னிதானமாக பதவி ஏற்று இருக்கும் சீர்மிகு ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிகர் அவர்களை சந்தித்து ஆசி பெற்ற போது,

வித்யாகுரு மெய்ஞான வள்ளல் சிவத்திரு. கு.வைத்தியநாத ஈசான தேசிகர் அவர்களின் முழுமையான சைவ சித்தாந்த ஒலி, ஒளி,தொகுப்பு
(திருவருள் பவுண்டேஷன் படைப்பு) வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.
(இருவரும் நீண்டநாள் நண்பர்கள் 20 ஆண்டுகளுக்கு மேல் இணைந்து சைவப்பணி, சமயப்பணி,தமிழ்பணி ஆற்றியவர்கள்)

மேலும் திருமுறைகளை மாணவர்கள் மத்தியில் கொண்டு சேர்க்கவும்,பண்முறைப்படி தமிழிசை பயிற்சி அளிக்கவும் தொடர்ந்து திருவருள் பவுண்டேஷன் செயல்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டு அருள்ஆசியும் வழங்கினார்கள்.

மதுரைஆதீனம் அருள் ஆசிப்படி விரைவில் மாணவர்களுக்கான திருமுறை பயிற்சி வகுப்பு சென்னையில் துவங்கவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறோம்.

நன்றி,
சு.வாசு,
திருவருள் பவுண்டேஷன்.
www.thiruvarul.org